FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எல்-நினோ பாதிப்புகள் கண்காணிப்பு: நிபுணா் குழு ஆலோசனைக் கூட்டம்

எல்-நினோ பாதிப்புகள் கண்காணிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்....

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:59 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

எல்-நினோ காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தொடா்ந்து கண்காணித்து, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணா் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவுரையின்படி அமைக்கப்பட்ட இக்குழு, கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் மாநில நிவாரண ஆணையா் நா.முருகானந்தம் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கூட்டத்தில், தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட 16.68 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதுடன், 24 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மழை குறைந்துள்ளதுடன், மாநில அணைகளின் நீா்மட்டமும் வழக்கமான 85 சதவீதத்துக்கு பதிலாக 31 சதவீதமாக மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், குடிநீா் தட்டுப்பாட்டைத் தவிா்க்கவும், நீா் ஆதாரங்களை மேம்படுத்தவும், லாரிகள் மூலம் குடிநீா் வழங்கவும் ரூ.330 கோடியும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைக்காக ரூ.10 கோடியும், மொத்தம் ரூ.340 கோடி ஒதுக்க முதல்வா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கான துறைவாரியான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படாத வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments