FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட் 2026: 'மை ஹோம்' திட்டம்! அனைவருக்கும் தரமான வீடு!

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான வீடு வழங்கும் திட்டம் பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:51 am IST
மை ஹோம் திட்டம் - DIPR
பகிர்:

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான வீடு வழங்க வழிவகை செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் 2026- 27 ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன், பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

அனைவருக்கும் தரமான வீடு

24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவ்வாண்டில் நிறைவு பெறுகிறது. 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானம் தொடங்கப்படுகிறது.

அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகள் வழங்கப்படும்.

'மை ஹோம்' திட்டம்

மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டமான 'MY-HOME' திட்டம் சென்னைப் பெருநகரத்தில் அறிமுகம். இதற்காக ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்படி அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான, தரமான குடியிருப்புகளாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

summary

TN Budget 2026: Quality Housing for All in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments