FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசின் பட்ஜெட் பிளாஸ்ட் அல்ல வேஸ்ட்: மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-ஐ வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட் என மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளது பற்றி..

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:42 pm IST
முதல்வர் விஜய் | மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட் 2026-ஐ வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு இன்று தாக்கல் செய்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து சில கட்சிகள் அதிருப்தியும், சில கட்சிகள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இன்று சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை பற்றி ரீல்ஸ் முதல்வருக்குக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், "பிளாஸ்டு பிளாஸ்டு" ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, "வேஸ்ட் வேஸ்ட்" எனச் சொல்லும்படிதான் இருந்தது.

அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட்..

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்னை, மின் கட்டணக் குளறுபடி பிரச்னை, விலைவாசி உயர்வுப் பிரச்னை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்.

அதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments