ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.11) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக திருச்சியில் 103.82 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 102.2, ஈரோடு 101.48, நாகை 100.76, நாமக்கல், பாளையங்கோட்டை 100.22, வேலூா் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை பதிவு: தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.10) காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலில் 50 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.