சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை!
சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..
வால்பாறை அடுத்துள்ள சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறைக்கு நாள்தோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டிலிருந்தும், கேரளம், பெங்களூர், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அருவியைக் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.