FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கர்நாடக முதல்வர் கருத்துக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

கர்நாடக பிரச்னைகளில் தமிழகம் தலையிட வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்தார்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
பழ.நெடுமாறன்
பகிர்:

கர்நாடக பிரச்னைகளில் தமிழகம் தலையிட வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டபோது அதில் தமிழர்களின் பங்கு அதிகம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்ற 3 தமிழர்களை கர்நாடக வனத் துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை தமிழக முதல்வரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். இது மனிதநேயம் சார்ந்த பிரச்னை என்பதால், எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படும்போது அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

Advertisement

Advertisement

2000}இல் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 முறை தமிழகத்துக்கு வந்து, ராஜ்குமாரை மீட்க உதவுமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். வீரப்பனும், "நெடுமாறனை அனுப்பினால் பேசத் தயார்' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக, கர்நாடக முதல்வர்களின் வேண்டுகோளின்படி நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, சுகுமார் ஆகியோரும் காட்டுக்குச் சென்று 5 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜ்குமார் மற்றும் அவரது மருமகன் கோவிந்தராஜை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அன்று மனிதநேயத்துடன் செயல்படாமல் இருந்திருந்தால் இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஆனால், அப்பாவித் தமிழர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைக்கும் வகையில் சிவகுமார் பேசுவது வேதனை அளிக்கிறது.

எனவே, 3 தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், இந்தப் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையம் அல்லது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments