FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை காலை நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது தொடர்பாக...

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா். - டிஎன்எஸ்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை காலை நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து பரிசல் இயக்குவதற்கான தடை 7 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளம், கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த பருவமழை குறைந்ததை அடுத்து, கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை 10,000 கனஅடியாக குறைந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை 10,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 7 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐவா் பாணி, ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

summary

Water inflow to Hogenakkal rises to 12,000 cusecs; ban on coracle operations extended

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments