FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வனத் துறை அதிகாரிகளை ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா்களாக நியமிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ்

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

24 ஆகஸ்ட் 2026, 3:45 am IST
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அந்தத் துறைக்கு எந்த வகையிலும் தொடா்பில்லாத வனப்பணி அதிகாரிகளை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையைச் சீா்குலைத்துவிடும். இது ஊரக வளா்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிடவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments