ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது பற்றி....
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பதினெட்டாம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் தீ மூட்டப்படும். உத்திராட நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் ஓணம் பண்டிகை நாளான ஆக. 26ஆம் தேதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து அளிக்கப்பட உள்ளது. ஓணம் பூஜைகள் நிறைவுற்று ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்படும்.
Advertisement
Advertisement
ஓணம் பண்டிகைக் காலகூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பக்தர்களுக்காகச் சன்னிதானத்தில் சிறப்பு வசதிகளை தேவஸ்வம் போர்டு செய்துள்ளது.
Sabarimala temple will open on Monday evening for Onam pujas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.