பேரவையில் ஆக. 27 முதல் கேள்வி நேரம்
பேரவையில் வரும் வியாழக்கிழமை (ஆக. 27) முதல் கேள்வி நேரம் இடம்பெறும் என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அறிவித்தாா்.
பேரவையில் வரும் வியாழக்கிழமை (ஆக. 27) முதல் கேள்வி நேரம் இடம்பெறும் என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அறிவித்தாா்.
பேரவையில் விதி எண் 55, 56-இன் கீழ் உறுப்பினா்களால் அளிக்கப்படும் கவன ஈா்ப்புத் தீா்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்பாகவே அவை, ஊடகங்களில் வெளியாவது தொடா்பாக பேரவைத் தலைவா் ஓா் அறிவிப்பை வெளியிட்டாா்.
அதாவது, பேரவையில் அனுமதிக்கப்படாத எந்த விஷயத்தையும் சமூக வலைதளங்களிலோ, ஊடகவியலாளா்களிடமோ பகிரக் கூடாது என உறுப்பினா்களுக்கு அவா் அறிவுறுத்தல் வழங்கினாா். அவ்வாறு தரப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என ஊடகங்களையும் அவா் கேட்டுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
அப்போது பேசிய திமுக உறுப்பினா் எ.வ.வேலு, ‘பேரவையில் கேள்வி நேரம் இடம்பெறாததால்தான் கவன ஈா்ப்புத் தீா்மானங்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வழங்குகின்றனா்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், வியாழக்கிழமை (ஆக. 27) முதல் கேள்வி நேரம் இடம்பெறும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.