இலவச பேருந்து திட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்!
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்..
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநகர, நகரங்களில் இயங்கும் சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இதையடுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுபடுத்தி, வெற்றிப் பயணம் திட்டம், தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அக். 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதன்படி மாநகரம், நகரங்களில் இயங்கும் சாதாரண அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் விரைவு, எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் பெண்களின் இலவசப் பயணத் திட்ட விரிவாக்கத்துக்கு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்களின் இலவச பயணத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை.
அரசின் மகளிர் இலவச பயணத் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தங்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று அவர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Opposition to free bus scheme: Private bus drivers protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.