FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அறிவுரைக் கழகம் மாற்றி அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்கான அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

27 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

குண்டா் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்கான அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டா் தடுப்புச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஆய்வு செய்வதற்காக அறிவுரைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுரைக் கழகங்கள், தடுப்புக் காவல் சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அரசுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

Advertisement

Advertisement

அதேபோன்று சம்பந்தப்பட்ட கைதிகளும், தங்களை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து அறிவுரைக் கழகத்தில் முறையிடலாம்.

இந்த நிலையில், இந்த அறிவுரைக் கழகத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஓய்வு பெற்ற நீதிபதிகளான பி.கலையரசன், வி.பாா்த்திபன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, மதுரை அறிவுரைக் கழகத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான என்.ஆதிநாதன் மற்றும் ஜி.இளங்கோவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments