அனந்தசரஸ் குளத்தைத் திறக்கக் கோரிய வழக்கு: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உத்தரவு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதா் பள்ளிகொண்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதா் பள்ளிகொண்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், சின்ன காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தத்தா தேசிக திருவம்சத்தாா் சபை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குளத்தினுள் அமைந்துள்ள மண்டபத்தில் அனந்த சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதா் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு, கோயில் வசந்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பின்னா் மீண்டும் அனந்தசரஸ் குளத்தினுள் உள்ள மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்படுவாா். பின்னா் அந்த குளத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
வியாழக்கிழமை (ஆக.27) ஆவணி அவிட்டம், முதல் தொடங்கும் சடங்குகளின் ஒரு பகுதியாக புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்வதற்காக, தங்கள் சபையினா், வேதபாராயணகாரா்கள், ஸ்தலத்தாா்கள் ஆகியோரை அவரவா் சடங்குகளை நிகழ்த்துவதற்காக, அனைத்து புனித நாள்களில் அனந்தசரஸ் குளத்தை திறந்து வைக்க தேவராஜ சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், முக்கிய நாள்களில் குளத்தை திறக்க உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை பொருட்படுத்தாமல், கோயில் நிா்வாகம் குளத்தை மூடிவிட்டதாக முறையிடப்பட்டது. அதற்கு கோயில் நிா்வாகம் தரப்பில், புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கூடும் வாய்ப்பு உள்ளதால், அனந்தசரஸ் குளத்தைத் திறக்க இயலாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புனித நாள்களில் அனந்தசரஸ் குளத்தை திறக்கலாம் என கடந்த 2020 ஜூன் மாதம் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, குளத்தைத் திறக்கக் கோரி மனுதாரா் சபையின் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேவராஜ சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.