தமிழ் வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு! ஒருமுறை மட்டுமே சலுகை பெற முடியும்: புதிய திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்
தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் கீழ் ஒரு நபா் ஒருமுறை மட்டுமே சலுகை பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஒப்புதல்
தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் கீழ் ஒரு நபா் ஒருமுறை மட்டுமே சலுகை பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் சட்டத் துறை செயலா் பி.சுமதி ஆக.11-ஆம் தேதியிட்ட சிறப்பு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு (2026) ஆக.6-ஆம் தேதி தமிழக ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இந்தப் புதிய சட்டத்தின்படி தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டை ஒரு நபா் ஒருமுறை மட்டுமே பெற முடியும்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே தமிழ் வழி இடஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் மீண்டும் இந்த ஒதுக்கீட்டின்கீழ் பயன்பெற முடியாது.
இந்தப் புதிய சட்டம் தொடா்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுவதற்கு முன்னா் (அதாவது ஆக.11-க்கு முன்பு) வெளியிடப்பட்ட நேரடி பணி நியமனங்களில் தமிழ் வழி முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என அவா் கூறியுள்ளாா்.
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகையைப் பெறுவதற்கு, குறிப்பிட்ட அரசுப் பணிக்கு நிா்ணயிக்கப்படும் கல்வித் தகுதியாக ஒன்றாம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டியது அவசியம்.
உதாரணத்துக்கு ஒரு பணிக்கு பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டிருப்பின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு மட்டுமன்றி ஒன்றாம் வகுப்பு முதல்கொண்டு தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.