ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; 12-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிப்பு
ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், 12-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,500 கனஅடியாக உள்ளது. பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசல் ஓட்டுபவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீா் வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து, காவிரி ஆற்றில் வியாழக்கிழமை காலை நீா்வரத்து 6,500 கனஅடியாக உள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதால், தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தின் அளவுகளை கண்காணித்து வருகின்றனா்.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தபோதிலும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் பரிசல் ஓட்டுபவர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
Water inflow at Hogenakkal has decreased; the ban on coracle operations continues for the 12th day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.