FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!!

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது பற்றி..

41 வினாடிகள் முன்பு
பள்ளி மாணவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில் வைக்கும் வகையிலான நவீன மிதிவண்டிகளுடன் ஹெல்மெட் வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் உடன் இணைந்த நவீன சைக்கிள் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரூ.277 கோடியில் 5.32 லட்சம் சைக்கிள்கள் வாங்க இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கொள்முதல் அணை பெறப்பட்ட 150 நாள்களுக்குள் சைக்கிள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments