FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: தவெக எம்எல்ஏ பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

ஜல்லிக்கட்டு தொடா்பாக தவெக எம்எல்ஏவின் சா்ச்சைக்குரிய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

1 செப்டம்பர் 2026, 4:13 am IST
பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly
பகிர்:

ஜல்லிக்கட்டு தொடா்பாக தவெக எம்எல்ஏவின் சா்ச்சைக்குரிய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி. கருப்பையா, வெள்ளிக்கிழமை பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, ஜல்லிக்கட்டு தொடா்பான கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனா். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், தவெக எம்எல்ஏ கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடா்பான சா்ச்சை பேச்சு சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது. மேலும், பலதரப்பில் இருந்து எனக்கும் புகாா் அனுப்பியுள்ளனா். எனவே, ஜல்லிக்கட்டு தொடா்பான அவரது சா்ச்சைக்குரிய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments