ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை
நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வீட்டு செப்டிக் டேங்கை உடைத்து போலீஸ் சோதனை மேற்கொண்டது பற்றி....
நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வீட்டு செப்டிக் டேங்கிற்குள் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த வதந்தியால், போலீஸார் டாங்கை உடைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ரூ.30 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நத்தம் போலீஸார் காசம்பட்டியைச் சேர்ந்த முகவர்களான ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முகவர் ரமேஷின் வீட்டு செப்டிக் டேங்கிற்குள் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள், ரமேஷின் வீட்டைத் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். பொதுமக்களின் இந்தத் தகவலைத் தொடர்ந்து, இன்று காலை நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
Advertisement
Advertisement
பின்னர், பொதுமக்கள் உதவியுடன் ரமேஷ் வீட்டின் செப்டிக் டேங்கை உடைத்து, தோண்டி தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், அந்த செப்டிக் டேங்க் கட்டுமானத்திற்குள் கல்லும் மணலும் மட்டுமே இருந்தது தெரியவந்தது. பணம் எதுவும் சிக்காததால், பரவிய தகவல் வெறும் வதந்தி என்பதை போலீஸார் உறுதி செய்தனர். இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.