FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

40 வினாடிகள் முன்பு
மேட்டூர் அணைக்கு நீா்வரத்து, வினாடிக்கு 10,485 கன அடியாக அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த மழையால் கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, வினாடிக்கு 9,035 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை வினாடிக்கு 10,485 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90.47 அடியில் இருந்து 90.92 அடியாக உயா்ந்துள்ளது.

அதேபோல அணையின் நீா்மட்டம் 90.47 அடியில் இருந்து 90.92 அடியாக உயா்ந்துள்ளது.

குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 53.70 டிஎம்சியாக உள்ளது.

டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு 

அணையின் நீா்மட்டம் 90 அடியைத் தாண்டியதாலும், பருவமழையை எதிா்நோக்கியும் செப்டம்பா் 1 முதல் 45 நாள்களுக்கு சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை மேட்டூா் வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் அணையின் வலது கரையில் அமைந்துள்ள மின் விசையை இயக்கி, மேல்நிலை மதகுகளை உயா்த்தி, பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுகிறாா்.

summary

Regarding the current status of the Mettur Dam...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments