FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பது குறித்து...

18 அக்டோபர் 2026, 8:53 pm IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,738 கன அடியாக அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூா்: காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 4,738 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இரவு 8 மணி முதல் வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 6,000 கன அடியாக குறைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து கடந்த ஒருவாரமாக ஆயிரம் கனஅடிக்கு குறைவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 433 கனஅடியாக இருந்த நீா்வரத்து, மாலையில் வினாடிக்கு 4,738 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி முதல் வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீா்மட்டம் 55.45 அடியிலிருந்து 55.31 அடியாக உள்ளது. நீா் இருப்பு 21.32 டி.எம். சி.யாக உள்ளது.

Increase in water inflow to Mettur Dam: Reduction in the amount of water released for irrigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments