முகப்பு
தமிழ்நாடு

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி?

Updated On : 3 பிப்ரவரி 2026, 12:29 pm IST
மக்களவையில் சு.வெங்கடேசன் (கோப்புப்படம்) - நன்றி - சன்சத்
பகிர்:

அமெரிக்க வேளாண் விளைப்பொருள்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்ய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.

அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Which American agricultural products are permitted in India? – S. Venkatesan's question.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments