மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
மகளிர் நலன் குறித்துப் பேசிய அவர்,
"மகளிரின் உரிமையை பாதுகாத்திட அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திட தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ. 1,000 செலுத்தும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கிறது. 1.31 கோடி மகளிர் பயன்பெறும் இந்த திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்பதே இந்த திட்டத்தின் வெற்றியாகும்.
நாடே போற்றும் இந்த திட்டத்தில் எதிர்வரும் மாதங்களிலும் மகளிர் பயன்பெறும் வகையில் பிப்ரவரி மாதத்துடன் மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைக்கால தொகுப்பு என ரூ. 5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்தியது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது. மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.
மேலும் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ரூ. 888 சேமித்துள்ளனர்.
பெண்களின் உயர்கல்விக்கு உதவிடும் புதுமைப் பெண் திட்டம், 19 தோழி விடுதிகள், கைம்பெண்களுக்கு நல வாரியம்
கருவுற்ற பெண்களுக்கு 130 அவரசகால மருத்துவ உதவி மையங்கள்
பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆன்மிகத்தில் பெண்களுக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்தால் ரூ. 10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைக்கப்படுகிறது.
மகளிருக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் வகையில் மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மகளிர் நலனுக்கான அரசாக இந்த அரசு உள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.