வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியலை ஈரோடு ஆட்சியர் கந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 38 ஆயிரத்து 466, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து ஆயிரத்து 574, மூன்றாம் பாலினத்தவர்கள் 182 பேர் என மொத்தம் 17 லட்சத்து 40 ஆயிரத்து 222 பேர் உள்ளனர்.
எஸ்ஐஆர்(வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்) பணிக்கு முன், 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தில் முறையான விவரம் இல்லாதது, முகவரி மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் பலர் நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 16 லட்சத்து 71ஆயிரத்து 760 பேர் இருந்தனர்.
Advertisement
Advertisement
அதைத்தொடர்ந்து நடந்த வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களின் மூலமும் , உதவி வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் நடந்த நேர்காணல் மூலமும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3.94 சதவீதம் அதாவது மாவட்டத்தில் 68 ஆயிரத்து 462 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் இறுதிப் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம். இவ்வாறு ஆட்சியர் கந்தசாமி கூறினார்.
வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், அங்கீகரிகப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
There are 17,40,222 voters in the 8 assembly constituencies in Erode district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.