விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியது இப்போதுதான் புரிகிறது: பெ. சண்முகம்!
திமுகவால் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
திமுகவால் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களின் மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பேசுகையில், “மக்கள் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க மறுத்து குதிரை பேரம், கழுதை பேரம் என்றெல்லாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.
ஆட்சி, அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திமுகவால் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும். தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற முறையில் தவெகவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
சில நாள்களுக்கு முன்பாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், அடுத்து விரைவில் தேர்தல் வரும்; விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று பேசியதன் பின்னணி என்ன? என்பது இப்போதுதான் வெளிவந்திருக்கிறது.
அதற்கான தீவிரமான முயற்சியில் இருக்கிறார் என்பதன் வெளிப்பாடுதான் எம்.எல்.ஏக்கள் பல கோடி ரூபாய் கொடுத்து விலைப் பேசியிருப்பதாகத் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் விருப்பத்தின் பேரில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வேறு, பணம் கொடுத்து பேரம் பேசி கட்சி மாற வைப்பது வேறு என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), has stated that the DMK is unable to accept being out of power and office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.