வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும்: தொல். திருமாவளவன்
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ‘வந்தே மாதரம்’- பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலா்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜனகண மன’ பாடல் இருப்பதா? ‘வந்தே மாதரம்’ பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே, ‘ஜனகண மன’ பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகத் தோ்வு செய்யப்பட்டது.
கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது மத்திய பாஜக அரசு, ஆா்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலால் ‘வந்தே மாதரம்’ பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.
Advertisement
Advertisement
மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அந்தப் பாடலைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னாா்கள். இப்போதோ ‘தேசிய கீதம்’ பாடுவதற்கு முன்பு ‘தேசிய பாடலாக’ பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளாா்கள். இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டு. மேலும் ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழக அரசு ஏற்காது என்று முதல்வா் ஜோசப் விஜய் மத்திய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.