FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?

புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம் என்று மக்கள் அதிருப்தி.

Updated On : 18 ஜூலை 2026, 2:48 pm IST
புதுச்சேரியில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் - Video grab
பகிர்:

தமிழகத்தில் பேனர் வைக்கக் கூடாது என்று தவெக தொண்டர்களுக்கு தமிழக அமைச்சர் என். ஆனந்த் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் தவெக ஆதரவாளர்கள் சாலை முழுவதும் பேனர் வைத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

புதுச்சேரி முழுவதும் தவெக தொண்டர்கள் வைத்துள்ள நூற்றுக்கணக்கான பேனர்களை கண்டுகொள்ளாத்து ஏன்? தமிழகத்தில் ஒரு சட்டம், புதுச்சேரியில் ஒரு சட்டமா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்த் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பூர்வீக மாநிலமான புதுச்சேரிக்கு நேற்று இரவு வந்த தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் அவர்களை தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இது மட்டுமல்லாது தமிழக அமைச்சர்களும் புதுச்சேரிக்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அமைச்சர் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புதுச்சேரி மாநிலம் புஸ்சி வீதி மற்றும் அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் நூற்றுக்கணக்கான பேனர்கள் மற்றும் கட்சிக் கொடி கம்பங்களை வைத்துள்ளனர். இது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் பிறந்தநாளுக்கும் சரி, என்னுடைய பிறந்த நாளிலும் சரி யாரும் பேனர் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் எனக் கூறிவரும் தவெக பொதுச்செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான என். ஆனந்த் புதுச்சேரியில் அந்த கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார்.

தமிழகத்தில் தொண்டர்களுக்கு ஒரு சட்டம், புதுச்சேரி தொண்டர்களுக்கு ஒரு சட்டமா என மக்கள் முனுமுனுத்தபடி செல்கின்றனர்.

summary

Ban on banners flouted in Puducherry! What do the people say?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments