FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தத்கால் முறையில் மின் இணைப்புப் பெற பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:23 am IST
ஜி.கே.வாசன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தத்கால் முறையில் மின் இணைப்புப் பெற பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு 50 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து தத்கால் மின் இணைப்புக்கு ரூ.1,250 கோடி வசூலித்துள்ளது. ஆனால், மின் இணைப்பு இன்னும் வழங்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா். அவா்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவது அவசியம்.

தத்கால் முறையில் மின் இணைப்புக்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியும், பல மாதங்களாக மின் இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்துவது அவா்களைக் கவலையடைச் செய்துள்ளது.

Advertisement

Advertisement

விண்ணப்பித்து 90 நாள்களில் மின் இணைப்புக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாதது சரியல்ல. ஆகவே, தமிழக அரசு தத்கால் முறையில் விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments