அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்!
எனது 88 ஆவது பிறந்த நாளில் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என ராமதாஸ் பேசியிருப்பது குறித்து...
சென்னை: எனது 88 ஆவது பிறந்த நாளில் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதற்காக மருத்தவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தைலாபுரம் இல்லத்தில் இருந்து ஒரே காரில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.
Advertisement
Advertisement
விழாவில் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:
எனக்கு இன்று 88 ஆவது பிறந்த நாள். இன்று முதல் அரசியல் துறவறம் செய்கிறேன். அரசியல் துறவறம் என்றால், இன்று முதல் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை, பாமகவை அன்புமணி, அவரது துணைவியார் பார்த்துக்கொள்வார்.
எனக்கு தலைசுற்றல் இருந்ததால் 20 நாள்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்.
என்னை பார்க்க வருபவர்கள், என்னிடம் நலம் விசாரிக்கலாம். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம். உங்களை பார்க்க ஆவலோடு ஓடி வந்துள்ளேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்றும் மாறாது என்று கூறினார்.
Regarding Ramadoss's announcement that he is renouncing politics starting today, on his 88th birthday...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.