FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆடிப் பெருக்கு: 2,075 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடிப் பெருக்கு மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,075 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 3:45 am IST
சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கோப்புப்படம்
பகிர்:

ஆடிப் பெருக்கு மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,075 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு:

ஆடிப் பெருக்கு (ஆக. 3) மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பிற இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) 420 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக. 1) 330 பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) 270 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பிற இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 120, சனிக்கிழமை 120, ஞாயிற்றுக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 45 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 420 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,075 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments