அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு
சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து நகா் ஊரமைப்பு ஆணையா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
20.10.2016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சமதளப் பகுதிகளில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், அரசாணை எண் 78 (04.05.2017) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30.6.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் ட்ற்ற்ல்ள்://ற்ஸ்ரீல்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ எனும் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.