FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

8 தலித் அமைச்சர்கள் உருவாக 75 ஆண்டுகள்! தவெகவில் என்ன செய்வார்கள்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தமிழக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பதில் குறித்து...

Updated On : 29 ஜூலை 2026, 10:17 pm IST
ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
பகிர்:

பட்டியலித்தில் இருந்து 8 பேர் அமைச்சர்களாக உருவாக 75 ஆண்டுகள் ஆனதாகவும், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை 5 ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூலை 29) தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் பேசியதாவது:

''வன்னி அரசு அமைச்சரானது என்ன மாற்றம் நடக்கும் என்று கேட்கிறார்கள். 5 ஆண்டுகள் கழித்து தெரியும்; 2 மாதத்தில் தெரியாது.

Advertisement

Advertisement

வன்னி அரசு அமைச்சரவையில் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய். 5 ஆண்டுகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய். இதனை எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் லஞ்சமும் இல்லாமல் தன்னுடைய மக்களுக்காக செலவு செய்யப்போகிறார் என்பதுதான் சீர்திருத்தம். இதுதான் அரசின் நிர்வாகம்.

தமிழ்நாட்டில் 8 தலித் அமைச்சர்கள் உருவாக 75 ஆண்டுகள் ஆனது. அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது 5 ஆண்டுகளில் தெரியும்.

பெண்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இணைந்து இந்த ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சிதான் உண்மையான மதச்சார்பற்ற ஆட்சி. கிறிஸ்தவரான ஜே.சி.பி. பிரபாகர் சட்டப்பேரவைத் தலைவராக உள்ளார். அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இடம்பெற்றுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

summary

It took 75 years for eight Dalit ministers to emerge! What role will they play in TVK minister Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments