சிக்கன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! கறிக்கடைக்காரர்கள் போராட்டம் வாபஸ்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கோழி இறைச்சிக் கடைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது குறித்து...
தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 31) அறிவிக்கப்பட்டிருந்த கோழி இறைச்சிக் கடைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணிநேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்குவதை உற்பத்தியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வலியுறுத்தி, இதனை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
ஆனால், வணிகர்களின் கோரிக்கை ஏற்க மறுக்கப்பட்டதாகக் கூறி, ஜூலை 31 முதல் கோழி இறைச்சிக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நாளை (ஜூலை 31) அறிவிக்கப்பட்டிருந்த கோழி இறைச்சிக் கடைகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Tamilnadu Chicken Traders Federation call off protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.