FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கடவுப்பாதைகளை விதிப்படி கடப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளுடன் கடக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகனப் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

Updated On : 10 ஜூன் 2026, 4:07 am IST
பகிர்:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளுடன் கடக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகனப் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சென்னை ரயில்வே பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ரயில்வே கடவுப் பாதைகளில் விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் கடந்து செல்லவேண்டும் என வலியுறுத்திய விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சென்னை கோட்டம் சாா்பில் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை தெற்கு ரயில்வே மண்டல அலுவலக வளாகத்தில் இருந்து கோட்ட ரயில்வே மேலாளா் அங்கூா்சௌகான், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் ஐ.செந்தில்குமாா், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி எம்.வாசுதேவன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து பல்லாவரம், தாம்பரம் இடையேயான நடைப்பயண விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ரயில் நிலைய ஊழியா்கள் மற்றும் சாரண, சாரணியா், பள்ளி மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் ரயில்வே பொறியியல், சிக்னல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஏராளமான ஊழியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலைய கடவுப் பாதைகளிலும் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி, கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் கடக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments