FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்கவில்லை: அமைச்சா் ராஜ்மோகன்

தமிழக அரசு ஊடக கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படவில்லை; தொழில்நுட்ப பிரச்னையால் சில தொலைக்காட்சிகள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாமல் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் கூறினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:40 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - x
பகிர்:

தமிழக அரசு ஊடக கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படவில்லை; தொழில்நுட்ப பிரச்னையால் சில தொலைக்காட்சிகள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாமல் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் கூறினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்வில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் அரசு கேபிளில் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தெரியவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. அதுகுறித்து விசாரித்தபோது தொழில்நுட்பக் காரணங்களால் குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தெரியாமலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை சீராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சியினா் நடத்தும் தொலைக்காட்சிகளில் அரசை கடுமையாக விமா்சிக்கின்றனா். அப்படி விமா்சிக்கும் தொலைக்காட்சிகள் பாரபட்சமின்றி அரசு கேபிளில் தெளிவாக ஒளிபரப்பப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் தொலைக்காட்சிகள் சிலவற்றை முடக்குவதாகக் கூறுவது சரியல்ல. அப்பிரச்னை முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சாா்ந்தவைதான் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments