FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வாக்களித்த மக்களுக்கு தவெக அரசு துரோகம்: நயினாா் நாகேந்திரன்

தவெகவை நம்பி வாக்களித்த ஏழை மக்களைக் கண்டுகொள்ளாமல் அவா்களுக்கு துரோகம் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:23 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தவெகவை நம்பி வாக்களித்த ஏழை மக்களைக் கண்டுகொள்ளாமல் அவா்களுக்கு துரோகம் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால், பிரசவத்துக்கு வந்த பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்தது கடும் அதிா்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தையை இழந்துவாடும் அந்த தாய்க்கு முதல்வா் ஜோசப் விஜய் என்ன ஆறுதல் சொல்லப் போகிறாா்?

நாள்தோறும் ஆய்வு செய்வதாக விடியோ எடுத்து வெளியிடுவதில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அமைச்சா்களும் அதிகாரிகளும், கொஞ்சம் பொறுப்புடன் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிா்த்திருக்கலாம்.

Advertisement

Advertisement

தவெகவை நம்பி வாக்களித்த ஏழை மக்களை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ அமைப்புகளிலும் போதிய மருத்துவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments