மாநிலங்களவை உறுப்பினராக பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக..
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சோ்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினா சி.வி. சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். காலியாக உள்ள இந்த இடத்தை காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்ரவா்த்திக்கு ஒதுக்குவதாக ஆளும் தவெக ஒப்புதல் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரவீண் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
இதில், பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனுவில் மட்டுமே 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் இருக்கின்றன. மற்ற 14 சுயேச்சைகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குக் காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி இன்று தெரிவித்துள்ளார்.
Election Officer Thenmozhi has announced that Congress's Praveen Chakravarty has been elected to the Rajya Sabha from Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.