குரு - சீடர்! தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய பாரதிராஜா - பாக்யராஜ்!
இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து...
இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்தவர் பாக்யராஜ்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
Advertisement
Advertisement
1977 ஆம் ஆண்டில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் உதவியாளராகத் திரைப் பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து, பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியதுடன், அவரின் அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் கதாநாயகனாகவும் பாரதிராஜாவால் பாக்யராஜ் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் பாக்யராஜ்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜாவுடன் இணைந்து, அவர் இயக்கிய ஒரு கைதியின் டைரி படத்துக்கு பாக்யராஜ் வசனம் எழுதினார். அதுமட்டுமின்றி, இப்படத்தின் இந்தி ரீமேக்கை பாக்யராஜே இயக்கினார்.
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவும் பாக்யராஜும் தனித்த இடங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜூன் 10-ல் பாரதிராஜாவும், இன்று (ஜூன் 27) பாக்யராஜும் மறைந்து, தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தனது குருவான பாரதிராஜா மறைந்த 17 நாள்களிலேயே பாக்யராஜும் சென்று விட்டார்.
The passing of Bharathiraja and Bhagyaraj—a massive loss to the Tamil film industry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.