3.5% இடஒதுக்கீடு ரத்து; சமூக நீதிக்கு எதிரான தீா்ப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா
இஸ்லாமியத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பினரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இஸ்லாமியத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பினரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இஸ்லாம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிா்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிா்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இஸ்லாமிய மாா்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறும் வகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், இந்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து 2 நீதிபதிகள் கொண்ட உயா்நீதிமன்ற அமா்வு தீா்ப்பு வழங்கியுள்ளது. இது, சமூக நீதிக்கு எதிரானது. தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.