முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 29 ஜூன் 2026, 9:41 am IST
மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பட்டது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்வரை குடிநீருக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். காவிரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம், கோனூர் பி.என்.பட்டி, வீரக்கல் புதூர் கூட்டு குடிநீர் திட்டம், காவேரிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைகளுக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை வரை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணிமுதல் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 146 கனஅடியிலிருந்து 158 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிந்து திறக்கப்படும் நீரின் அளவை விடா குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் 78.90 அடியிலிருந்து 78.81 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 40.78 டி.எம்.சி.யாக உள்ளது.

summary

Water release from Mettur Dam was increased to 3,000 cubic feet per second on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments