மேட்டூர் அணை: இன்றைய (அக்.16) நிலவரம்!
மேட்டூர் அணை நீர்வரத்து இன்றைய (அக்.16) நிலவரம் பற்றி...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 534 கன அடியிலிருந்து வினாடிக்கு 522 கன அடியாக சற்று குறைந்தது .
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக வியாழக்கிழமை மாலை 8 மணி முதல் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 57.98 அடியிலிருந்து 57.33 அடியாக சரிந்தது நீர் இருப்பு 22.73 டி. எம். சி-யாக உள்ளது.
Advertisement
Advertisement
The inflow of water into the Mettur Dam decreased from 534 cubic feet per second to 522 cubic feet per second this morning (Oct. 16).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.