ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தியா வேனுகோபால் சர்மா, வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை செயலாளராக குமரகுருபரன், சுற்றுலா, கலாச்சாரத் துறை முதன்மைச் செயலாளராக ஸ்வர்ணா, தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ், ஜவுளித்துறை ஆணையராக சோபனா, தொழிலாளர் துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ், நகர திட்ட ஆணையராக கிரண் குராலா, மீன்வளத் துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன், சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
The Tamil Nadu government has ordered the transfer of various IAS officers in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.