முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி?
முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பற்றி...
முதல்வர் ஜோசப் சி. விஜய்யின் ஆலோகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, அவரின் தனிச் செயலர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை மற்றும் விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வரின் அரசியல் ஆலோசகராக தமிழக அரசு நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்தே அக்கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் வியூகம் முதல் அமைச்சரவை தேர்வு முதல் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதேபோல், விஜய்யின் நண்பரும், தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டியை முதல்வரின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், முதல்வர் விஜய்யின் சிறுவயது நண்பர் என்று கூறப்படுகிறது. ஆளுநம் மாளிகைக்கு ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கடிதம் வழங்க சென்றபோதுகூட உடனிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நிகரான சிறப்பு ஆலோசகர்கள் பதவி வழங்குவதற்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே, முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ரத்தன் பண்டிட்டை ஆலோசகராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
John Arokiasamy and Vishnu Reddy appointed as Chief Minister Vijay's advisors?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.