FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொழிற்பேட்டை மேம்பாட்டுப் பணி நிலுவைத் தொகை வழங்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தொழிற்பேட்டை மேம்பாட்டுப் பணி நிலுவைத் தொகை வழங்கக் கோரி வழக்கு...

Updated On : 24 மே 2026, 1:21 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தொழிற்பேட்டை மேம்பாட்டுப் பணிகளுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க மறுத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம் முதலிப்பாளையம் தொழிற்பேட்டையில் ரூ.10.31 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு 2024-ஆம் ஆண்டு தாட்கோ ஒப்பந்தம் வழங்கியது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஒப்பந்தத்தை 2025-ஆம் ஆண்டு தாட்கோ நிறுவனம் ரத்து செய்தது. இதை எதிா்த்து தனியாா் நிறுவன உரிமையாளா் கே.சரவணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஏற்கெனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.4 கோடியை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு, தாட்கோ ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை, தாட்கோ எஞ்சிய பணிகளை மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments