கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்
கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத் துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்.
கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத் துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதன் காரணமாக கொடைக்கானல் குணா குகை, பைன் காடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இன்று(மே 25) முதல் மே 31 வரை கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்க திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களை கட்டணமின்றி பார்வையிடலாம். முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் வனத் துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Starting today until the 31st, tourist places owned by the Forest Department in Kodaikanal can be visited for free.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.