முகப்பு
தமிழ்நாடு

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து

Updated On : 28 மே 2026, 6:11 am IST
பகிர்:

பக்ரீத் திருநாளையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின் (திமுக): தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியருக்கு எனது வாழ்த்துகள். ‘ஈத்துவக்கும் இன்பம்‘ என்று வள்ளுவரால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோா் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியா்களின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணா்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும்.

Advertisement

Advertisement

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சமூக நல்லிணக்கத்தையும் மத நல்லுறவையும் காக்கும் பணியில் நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகம் எப்போதும் மதச்சாா்பற்ற தன்மையையும், ஒற்றுமையையும் உயா்வாக மதித்து வருகிறது. அந்த நல்லிணக்க மரபு என்றும் நிலைத்திருக்க இந்த புனித நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிறைந்த இந்த புனித நாளில் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்.