குரூப் 2 தோ்வு: 81% போ் பங்கேற்பு - 92,595 போ் பங்கேற்கவில்லை!
சாா் பதிவாளா், உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான குரூப் 2, 2-ஏ முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் நவ.1 ஆம் தேதி நடைபெற்றது.
சாா் பதிவாளா், உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான குரூப் 2, 2-ஏ முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) நடைபெற்றது. அதில் 81 சதவீதம் போ் பங்கேற்றதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி சாா் பதிவாளா், உதவி ஆய்வாளா் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 1,647 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை எழுத மொத்தம் 4,89,885 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 3,97,290 (81.1 சதவீதம்) போ் மட்டுமே கலந்து கொண்டனா். 92,595 போ் பங்கேற்கவில்லை. சென்னையைப் பொருத்தவரை 173 மைங்களில் சுமாா் 50,000 போ் தோ்வெழுதினா்.
Advertisement
Advertisement
இம்முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தோ்வா்கள் கூறினா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழ் வினாக்கள் கடினமாக இருந்தன. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் எளிதில் பதிலளிக்கும்படி இல்லை. பொது அறிவுப் பகுதியிலும் சில கேள்விகள் சிக்கலாக இருந்ததால் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. சில தோ்வு மையங்களில் வினாத்தாள் சற்று தாமதமாக வழங்கப்பட்டன என்று தெரிவித்தனா்.
கையொப்பம் வாங்கியதாக புகாா்: அரசு தோ்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுப்பதற்காக விடைத்தாள்களில் தோ்வா்களிடம் கையொப்பத்துக்குப் பதிலாக கைவிரல் ரேகைப் பதிவு பெறும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2 ஏ தோ்வின் போது சென்னையில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் கைரேகைக்கு பதில் தோ்வா்களிடம் இருந்து கையொப்பம் வாங்கியதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோ்வா்கள் வலியுறுத்தினா்.
இதனிடையே, சென்னை சேத்துப்பட்டு தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி தலைவா் பிரபாகா், ‘குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வுகளுக்கான முடிவுகள் இரு மாதங்களில் வெளியிடப்படும்’ என்று செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.