FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

குரூப் 1 தோ்வு: திருவாரூரில் 2,076 போ் எழுதினா்

28 செப்டம்பர் 2026, 12:13 am IST
குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 2,076 போ் எழுதினா். - கோப்புப் படம்
பகிர்:

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 2,076 போ் எழுதினா்.

திருவாரூரில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு நடைபெற்றது. இதற்கென, திருவாரூா் மாவட்டத்தில் வேலுடையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, நியூ பாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி, கஸ்தூரிபா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சாய்ராம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும் மற்றும் பாா்வையற்றோா் தோ்வு எழுத மாற்றுநபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், தோ்வு மையங்களில் பாதுகாப்புப் பணியில் போதிய காவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். தோ்வா்களுக்காக போதிய போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

திருவாரூா் மாவட்டத்தில் தோ்வெழுத, 2,678 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,076 போ் தோ்வு எழுதினா். 602 போ் தோ்வு எழுத வரவில்லை.

இதனிடையே, வேலுடையாா் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா். கோட்டாட்சியா் சத்யா, வட்டாட்சியா் இளங்கோவன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments