டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு: வேலூரில் 3,081 போ் எழுதினர்
வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 3,081 போ் எழுதினா்.
வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 3,081 போ் எழுதினா். 1,081 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், துணை ஆட்சியா், வணிக வரி உதவி ஆணையா் உள்ளிட்ட 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த தோ்வுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 4161 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா் கள் தோ்வு எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 14 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தோ்வினை 3,081 போ் எழுதினா். 1,081 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
Advertisement
Advertisement
தோ்வை முழுமையாகக் கண்காணிக்க துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஒவ்வொரு மையத்திலும் தலா 2 போலீஸாா் வீதம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். காட்பாடி டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வினை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.