14 சாா்- பதிவாளா் அலுவலகங்களில் சோதனை: ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் 14 சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், கணக்கில் வராத ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 14 சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், கணக்கில் வராத ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக பத்திரப் பதிவுத்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 589 சாா்- பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் அண்மைக்காலமாக சாா்-பதிவாளா் அலுவலகங்கள் மீது அதிகமாக லஞ்சம், ஊழல் புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, பரிசு பொருள்கள் பெறுவதாக கூறி கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாக சில சாா்-பதிவாளா் அலுவலகங்கள் மீது புகாா்கள் வந்தன.
இதையடுத்து புகாா்களுக்குள்ளான சாா்- பதிவாளா் அலுவலகங்கள், அதிகளவு பண நடமாட்டம் உள்ள சாா்-பதிவாளா் அலுவலங்கள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்புத்துறை இயக்குநா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
அந்த உத்தரவின் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், மாநிலம் 14 சாா்- பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.18.96 லட்சம் பறிமுதல்: இச் சோதனையில் 16 சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.18,96,415 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல சந்தேகத்துக்குரிய வகையில் கைப்பேசி செயலி வாயிலாக ரூ.20,02,615 பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த பணத்தையும் சட்டப்படி பறிமுதல் செய்வதற்குரிய நடவடிக்கையில் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.