FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!

அரசுப் பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய கருத்து சர்ச்சையாகியிருப்பது பற்றி...

அமைச்சர் ஜெகதீஸ்வரி - x
பகிர்:

முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள் என்று தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அயன்ரெட்டியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது:

Advertisement

Advertisement

”இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதை பார்த்தால் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள் பள்ளிக்கு போகிறவர்கள் போன்று முடியை வெட்டுவது கிடையாது. சிலர் ரெளடிகள் மாதிரி வெட்டுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் முடி வெட்டுபதை சரி செய்ய வேண்டும். ஒழுங்காக முடி வெட்டும் குழந்தையை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள். அதில் தவறே கிடையாது. நம் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இதைச் சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது.

இரண்டாவது கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். ஏதேனும் பிரச்னையில் சிக்கி, பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் சென்றால், அங்கே மாணவனின் தோற்றத்தை பார்த்தவுடன் அவரை தவறு செய்தவர் என்று காவலர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள்.

இதில் காவலர்களின் தவறு எதுவும் இல்லை. மாணவரின் தோற்றம்தான் அவர்களை அப்படி உறுதி செய்ய வைக்கிறது. ஒருவரின் தோற்றம் தான் அவரின் குணத்தை காண்பிக்கிறது. மாணவர் தவறு செய்தாரா? இல்லையா? என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகு முடிவாகும். ஆனால், பார்த்தவுடன் அவரின் தோற்றத்தால் தவறான எண்ணம் உருவாகிறது” எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே மொட்டை அடித்துவிடுங்கள் என்று அமைச்சர் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகின்றது.

summary

Shave the heads of students who haven't had a haircut! Minister Jagadeeswari speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments